சினிமா செய்திகள்
null

கல்யாணி பிரியதர்ஷன் நடித்த `லோகா' படத்தின் திரைவிமர்சனம்!

Published On 2025-08-31 18:31 IST   |   Update On 2025-08-31 18:32:00 IST
சந்திரா என்ற கதாபாத்திரத்தில் அதீத சக்திகள் படைத்த பெண்ணாக கல்யாணி பிரியதர்ஷன் மிரட்டியிருக்கிறார்.

கதைக்களம்

இத்திரைப்படம் எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது. நாயகி கல்யாணி பிரியதர்ஷன் பெங்களூர் நகரத்திற்கு வருகிறார். பேக்கரி ஒன்றில் பணியாற்றும் அவர் தங்கியிருக்கும அடிக்குமாடி குடியிருப்புக்கு எதிரே இருக்கும் வீட்டில் வசிக்கும் நஸ்லன், சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் வாழ்ந்து வருகின்றனர். எதிர் வீட்டில் இருக்கும் இவர்கள் கல்யாணியை காதலில் விழ வைக்க முயற்சி செய்கிறார்கள்.

அதே சமயம், மனிதர்களை கடத்தி அவர்களது உடல் உறுப்புகளை திருடும் கும்பலால் பெங்களூரில் பரபரப்பு ஏற்படுகிறது. அந்த கும்பலுடன் தொடர்புடைய போலீஸ் இன்ஸ்பெக்டரான சாண்டியுடன், கல்யாணி பிரியர்தர்ஷன் மோத வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

அப்போது தான் தெரிய வருகிறது கல்யாணி ஒரு சாதாரண பெணல்ல அவளுக்கு பல சக்திகள் இருக்கிறது. அதற்கு அடுத்து என்ன ஆனது? உண்மையில் கல்யாணி யார் ? எப்படி அவருக்கு இந்த சக்தி கிடைத்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

சந்திரா என்ற கதாபாத்திரத்தில் அதீத சக்திகள் படைத்த பெண்ணாக கல்யாணி பிரியதர்ஷன் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் அசத்துகிறார். அதிகம் பேசவில்லை என்றாலும், தனது அளவான உடல் அசைவுகள் மூலம் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்திற்கு மிக கச்சிதமாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

சந்திராவை காதலில் விழவைக்கும் போராடும் இளைஞர்களாக நடித்திருக்கும் நஸ்லன், சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் ஆகியோர் அவர்களது உரையாடல் மற்றும் உடல் மொழி ஆகியவை பல இடங்களில் சிரிக்கவும் வைக்கிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் நாச்சியப்பா கவுடா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடன இயக்குநர் சாண்டியின் வில்லத்தனம் மிரள வைக்கிறது.

இயக்கம்

நம் புராணக் கதைகளில் உள்ள கதாபாத்திரத்தை அதீத சக்தி படைத்த சூப்பர் ஹீரோவாக சித்தரித்து, அதன் மூலம் ஒரு மிகப்பெரிய உலகத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் டொமினிக் அருண், சந்திரா என்ற முதல் அத்தியாயத்தை மிக சிறப்பாக கையாண்டுள்ளார். குறிப்பாக சந்திராவின் ஃப்ளேஷ்பாக் பகுதியை கையாண்ட விதம் பாராட்டுக்குறியவை.

முதல் பாதியில் திரைக்கதை விறுவிறுப்பாக சென்றாலும் அது இரண்டாம் பாதியில் சற்று தொய்வடைகிறது. முதல் பாதி பார்வையாளர்களுக்கு சிறு குழப்பம் ஏற்படுத்துவது பலவீனம்.

பல கேள்விகளுக்கு படத்தில் விடை சொல்லாமல், வேறு சூப்பர் ஹீரோக்களின் அறிமுகத்தோடு படத்தை முடித்திருப்பது திரைக்கதையை சற்று தொய்வடைய செய்கிறது.

இசை

இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை,

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியின் கோணங்கள் மற்றும் வண்ணங்கள் படத்தை பிரமாண்டமானதாக மட்டும் படத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. படத்தில் வரும் இரவு காட்சிகள் மிகவும் கலர்ஃபுல்லாக காட்சி படுத்தியுள்ளார்.

தயாரிப்பு

இப்படத்தை துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

ரேட்டிங்- 3/5

Tags:    

Similar News