சினிமா செய்திகள்

24 வயதில் மரணம் அடைந்த பிரபல மலையாள நடிகை

Published On 2023-12-09 08:26 GMT   |   Update On 2023-12-09 08:26 GMT
  • மலையாள சினிமா மற்றும் டெலிவிசன் உலகில் பிரபலமாக அறியப்பட்டவர்.
  • காக்கா படத்தின் இவரின் பஞ்சமி காதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

பிரபல மலையாள நடிகை லக்ஷ்மிகா சஜீவன் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சார்ஜாவில் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு 24 வயதே ஆகிறது.

மலையாள சினிமா மற்றும் டெலிவிசன் உலகில் இவர் பிரபலமானவர். புறக்கணிக்கப்பட்ட சமூகத்தினரின் போராட்டங்களை பற்றிய காக்கா படத்தின் பஞ்சமி காதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாக அறியப்பட்டார். இவரது மறைவு மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சவர்ணதாதா, சவுதி வெள்ளக்கா, புழயம்மா, உயாரே, ஒரு குட்டநாடன் பிளாக், நித்யஹரித நாயகன், ஒரு யமந்தன் பிரேமகதா ஆகிய படங்களில் இவர் நடித்ததில் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News