சினிமா செய்திகள்

மாயக்கூத்து திரைவிமர்சனம்

Published On 2025-07-11 17:23 IST   |   Update On 2025-07-11 17:23:00 IST
  • எழுத்தாளரான வாசன், மூன்று தொடர்கதைகளை ஒரே நேரத்தில் எழுதி வருகிறார்.
  • கர்வமிகு எழுத்தாளர் வாசன் கதாபாத்திரத்தில் நாகராஜன் கண்ணன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கதைக்களம்

எழுத்தாளரான வாசன், மூன்று தொடர்கதைகளை ஒரே நேரத்தில் எழுதி வருகிறார். முதல் தொடரில், தனபால் எனும் ரெளடி தனது 50 ஆவது கொலையைச் செய்துவிட்டு, அத்தொழிலில் இருந்து விடுபட நினைக்கிறார். இரண்டாவது தொடரில், மருத்துவராக நினைக்கும் பள்ளி மாணவியான ராஜிக்கு நீட் தேர்வு பிரச்சனையில் சிக்குகிறார். மூன்றாவது தொடரில், செல்வியெனும் வேலைக்காரப் பெண்ணின் மீது இரண்டாயிரம் ரூபாய் திருடியதாகப் பழி விழுகிறது.

கற்பனையில் எழுதிய கதாபாத்திரங்கள் உயிர் பெற்று வந்து, எழுத்தாளர் வாசனை சந்திக்கின்றன. எங்களை இப்படி தவிக்க விடலாமா... கதையை மாற்றுங்க என எழுத்தாளரை மிரட்டுகின்றன. அவர் மறுக்கிறார். உண்மைக்கும், பேண்டசிக்கு நடுவில் வாசன் தவிக்கிறார்.

இறுதியில் வாசன், அவர் எழுதி வந்த தொடர் கதைகளை மாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

கதாபாத்திரங்களை படைப்பதால் தன்னைக் கடவுளென நினைத்துக் கொள்ளும் கர்வமிகு எழுத்தாளர் வாசன் கதாபாத்திரத்தில் நாகராஜன் கண்ணன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆணவமாக பேசுவது, பயப்படுவது, கோபம் என எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

எடிட்டர் டெல்லி கணேஷ், ரவுடி சாய் தீனா, சிற்பி மு.ராமசாமி, வாசனின் மனைவி காயத்ரி, வேலைக்கார பெண் ஐஸ்வர்யா ரகுபதி ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள்.

இயக்கம்

சமூகத்தில் பெரும்பாலானவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் எழுத்தாளர்கள் பொறுப்புடன் தங்கள் எழுத்துகளை அளிக்கவேண்டும் எனச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராகவேந்திரா. படம் பார்ப்பவர்களை சீட்டில் இருந்து எழுந்துக்க விடாமல் காட்சிகளால் கட்டி போட்டு இருக்கிறார். அதிக வசன காட்சிகள் இருந்தாலும் அதை ரசிக்கும் படியும், புரியும் படியும் கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவாளர் சுந்தர் ராம் கிருஷ்ணன்-இன் ஒளிப்பதிவு படத்தின் திரையோட்டத்திற்கு பெரிதும் பலமாக அமைந்துள்ளது.

இசை

இசையமைப்பாளர் அஞ்சனா ராஜகோபாலன் ஆகியோரின் உழைப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

தயாரிப்பு

Rahul Movie Makers & Abhimanyu கிரேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.                                                 

Tags:    

Similar News