சினிமா செய்திகள்

கிராமக்குயில் கொல்லங்குடி கருப்பாயி காலமானார்

Published On 2025-06-14 12:19 IST   |   Update On 2025-06-14 12:19:00 IST
  • 'ஆண் பாவம்' படத்தில் விகே ராமசாமிக்கு அம்மாவாக, பாண்டியராஜனுக்கு பாட்டியாக நடித்தவர் கொல்லங்குடி கருப்பாயி.
  • ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண்ணிசைப் பாடல்களைப் பாடியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பாண்டியராஜன் நடிப்பில் வெளியான 'ஆண் பாவம்' படத்தில் விகே ராமசாமிக்கு அம்மாவாக, பாண்டியராஜனுக்கு பாட்டியாக நடித்தவர் கொல்லங்குடி கருப்பாயி. மதுரை-தொண்டி சாலை, சிவகங்கை உள்ள கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பாயி.

இவரை ஆண் பாவம் படத்தின் மூலம் பாண்டியராஜன் தான் அறிமுகப்படுத்தினார். நாட்டுப்புற பாடகியான இவர், கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண்ணிசைப் பாடல்களைப் பாடியிருக்கிறார்.

ஆண் பாவம் படத்திற்கு பின் கோபாலா கோபாலா, ஆயிசு நூறு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 1993-ல் இவரது கலைச் சேவையை பாராட்டி முதல்வர் ஜெயலலிதா கலைமாமணி விருது வழங்கினார்.

தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பாடகியாகவும் இருந்த கொல்லங்குடி கருப்பாயி இன்று காலமானார். இவருக்கு வயது 99. மேலும் இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News