null
கங்குவா அரசன் வருகிறான் - இசை வெளியீட்டு விழா அறிவிப்பு
- சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'.
- திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தற்பொழுது படக்குழு அறிவித்துள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 26 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னையில் உள்ள நேரு அரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெறவுள்ளது.
வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளை வட இந்தியாவில் படக்குழு தொடங்கியது. படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்றது.
கங்குவா திரைப்படத்தின் இரண்டாம் பாடலான் Vamos Brincar Babe என்ற பாடல் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு புது போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.