null
கூலி படத்தில் நடிக்கும் பிரபல கன்னட நடிகை ?
- கூலி படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழு இன்று வெளியிட்டது.
- மஞ்சுமெல்லா பாய்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைத்துறையில் பிரபலமான சவுபின் ஷாஹிர் நடிக்கிறார்.
வேட்டையன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வருகிறது.
முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகியது.
கூலி படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழு இன்று வெளியிட்டது. அதன்படி, மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைத்துறையில் பிரபலமான சவுபின் ஷாஹிர், கூலி படத்தில் தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூலி படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வரும் நிலையில், யார் யார் இப்படத்தில் நடித்துள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கூலி படத்தில் கன்னட நடிகை ரச்சிதா ராம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், இது குறித்து படக்குழுவிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.
ரச்சிதா ராம் படங்கள் கன்னட படங்கள் மட்டுமின்றி ஏராளமான சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற நந்தினி சீரியல் ஹீரோயின் நித்யா ராமின் தங்கை தான் ரச்சிதா ராம் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.