சினிமா செய்திகள்

Mr.husband! இந்த வீடியோ என்ன மிரட்டலின் பெயரில் அனுப்பியதா? - ஜாய் கிரிசில்டா

Published On 2025-11-06 13:14 IST   |   Update On 2025-11-06 13:14:00 IST
  • என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது.
  • மாதம்பட்டி ரங்கராஜை மிரட்டி திருமணம் செய்து கொள்ள அவர் என்ன குழந்தையா?” என ஜாய் கிரிசில்டா கேள்வி எழுப்பியிருந்தார்.

தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தன்னை 2வது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார் என்று ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார்.

அவரது ஸ்டோரியில், எனது குழந்தையின் தந்தை நான் தான் என ரங்கராஜ் ஒப்புக் கொண்டதால், DNA ஆதாரங்கள் தேவையில்லை எனவும், வழக்கு முடியும் வரை குழந்தை பராமரிப்புக்கு மறுக்க கூடாது எனவும் மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, ஜாய் கிரிசில்டாவின் இந்த கூற்றை மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று திட்டவட்டமாக மறுத்தார். 'ஜாய் கிரிசில்டா என்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜை மிரட்டி திருமணம் செய்து கொள்ள அவர் என்ன குழந்தையா?" என ஜாய் கிரிசில்டா கேள்வி எழுப்பியிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் முன்பு பேசிய வீடியோ ஒன்றை ஜாய் கிரிசில்டா வெளியிட்டுள்ளார் .

வீடியோவை வெளியிட்டு ஜாஸ் கிரிசில்டா கூறியிருப்பதாவது:- இந்த வீடியோ என்ன மிரட்டலின் பெயரில் அனுப்பியதா??! Mr husband @MadhampattyRR ? மக்களே, ப்ளீஸ் சொல்லுங்க — இதுல லவ் லா பேசுறாரா இல்ல மிரட்டலின் பெயரில் பேசுறாரா? கேக்குறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்ற மாதிரி...

நான் பயணம் செய்து கொண்டிருந்தபோது என் கணவர் என்று சொல்லப்படுபவர் இந்த வீடியோ எனக்கு அனுப்பினார். நாங்கள் பிரிந்திருக்கும்போதோ அல்லது நேரில் சந்திக்க முடியாதபோதோ அவர் தினசரி இதுமாதிரியான வீடியோக்களை எனக்கு அனுப்புவார் என்று கூறியுள்ளார்.



Tags:    

Similar News