ராஜேஷ் - ஜீவா கூட்டணியில் உருவாகும் 'ஜாலியா இருந்த ஒருத்தன்' படத்தின் ப்ரோமோ வெளியீடு
- இயக்குநர் ராஜேஷ் உடன் ஜீவா மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார்.
- இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ஜீவா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது 'ப்ளாக்' திரைப்படம். இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியிருந்தார். ஜீவாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சாம்.சி எஸ் இசையமைத்திருந்தார். திரைப்படம் ஒரு டைம் லூப் கதையம்சத்தில் உருவாகி மக்களின் ஆதரவை பெற்றது.
இதனை தொடர்ந்து, ஜீவாவின் 45 ஆவது படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' உருவாகி உள்ளது. இந்நிலையில், இயக்குநர் ராஜேஷ் உடன் ஜீவா மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார். ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் புதிய படத்திற்கு 'ஜாலியா இருந்த ஒருத்தன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ராஜேஷ் - ஜீவா கூட்டணியில் உருவான சிவா மனசுல சக்தி படம் பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.