சினிமா செய்திகள்

ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படத்தை இயக்கும் ஜோ பட இயக்குனர்

Published On 2025-04-02 11:21 IST   |   Update On 2025-04-02 11:21:00 IST
  • ஜோ படத்தின் மூலம் அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் பலரது கவனத்தை ஈர்த்தார்.
  • விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்து ஜோ திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் மூலம் அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் பலரது கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில், ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படத்தை ஹரிஹரன் ராம் இயக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்த மீசைய முறுக்கு திரைப்படத்தில் உதவி இயக்குனராக ஹரிஹரன் ராம் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News