சினிமா செய்திகள்
விவரம் தெரிந்தால் சொல்லுங்கள்.. ரெயிலில் இனிப்பு விற்கும் முதிய தம்பதிக்கு நிதியுதவி அறிவித்த ராகவா லாரன்ஸ்
- முதிய தம்பதி குறித்து அறிந்து அவர்களுக்கு உதவ ராகவா லாரன்ஸ் முன்வந்துள்ளார்.
- அவர்களுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை கொடுக்க தயாராக இருக்கிறேன்.
நடிகர், இயக்குனர், நடன கலைஞர் என பன்முக திறமை கொண்டு ராகவா லாரன்ஸ் அவரது உதவி செய்யும் குணத்திற்காக அறியப்படுகிறார்.
இந்நிலையில் சென்னையில் ரெயில்களில் இனிப்பு விற்கும் முதிய தம்பதி குறித்து அறிந்து அவர்களுக்கு உதவ ராகவா லாரன்ஸ் முன்வந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், சென்னையில் 80 வயது முதியவரும் அவர் மனைவியும் இனிப்பு தயாரித்து ரெயில்களில் விற்பனை செய்வதை இணையதளம் மூலம் அறிந்தேன். அவர்களுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை கொடுக்க தயாராக இருக்கிறேன்.
முதியவர் காண்பித்திருக்கும் செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் பற்றி விவரம் தெரிந்தவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்" என்று ராகவா லாரன்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.