வெளிநாட்டுக்கு போனா வாங்குங்க.. ஆனா அத மட்டும் கேக்காதீங்க..!- சிம்பு கொடுத்த அட்வைஸ்
நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார்.
இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன்மூலம் சிம்பு மற்றும் வெற்றிமாறன் உடன் முதல்முறையாக அனிருத் கூட்டணி சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், சிம்புவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வெளிநாட்டில் ஷாப்பிங் சென்ற சிம்பு அட்வைசும் வழங்கியுள்ளார்.
அதில்," வெளிநாட்டிற்கு போனீங்கனா ஷாப்பிங் செய்யுங்க.. பொருட்களை வாங்குங்க.. ஆனா, விலை மட்டும் கேட்டுடாதீங்க.. தலை சுத்திடும்.. நேரா போய் பணத்த கட்டிட்டு அப்புறம் அந்த பொருள் எவ்வளவு காசு என பாத்து மனச தேத்திக்கோங்க.." என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.