சினிமா செய்திகள்

தர்மேந்திரா நலமுடன் உள்ளார்- தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என குடும்பத்தினர் வலியுறுத்தல்

Published On 2025-11-11 10:41 IST   |   Update On 2025-11-11 10:41:00 IST
  • இது மிகவும் அவமரியாதை மற்றும் பொறுப்பற்ற செயல்.
  • தயவுசெய்து எங்கள் குடும்பத்தினரின் தனியுரிமைக்கு உரிய மரியாதை கொடுங்கள்.

இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா உடல்நலக்குறைவால் இன்று காலமானார் என்று செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், நடிகர் தர்மேந்திரா உயிருடன் இருப்பதாக அவருடைய மனைவியும் நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலினி தனது எக்ஸ் பக்கத்தில் பரபரப்பான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:- நடந்து கொண்டிருப்பது மன்னிக்க முடியாதது! சிகிச்சைக்குப் பதிலளித்து குணமடைந்து வரும் ஒருவரைப் பற்றி பொறுப்பான சேனல்கள் எவ்வாறு தவறான செய்திகளைப் பரப்ப முடியும்? இது மிகவும் அவமரியாதை மற்றும் பொறுப்பற்ற செயல். தயவுசெய்து எங்கள் குடும்பத்தினரின் தனியுரிமைக்கு உரிய மரியாதை கொடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.


அவரைத்தொடர்ந்து தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "என் தந்தை நலமுடன் உள்ளார், குணமடைந்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, நேற்று நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கு தர்மேந்திராவின் குடும்பத்தினர் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News