சினிமா செய்திகள்

ப்ரைடே- திரைவிமர்சனம்

Published On 2025-12-01 20:17 IST   |   Update On 2025-12-01 20:17:00 IST
வன்முறை சூழ்ந்த ரவுடிகளின் வாழ்க்கையின் மறுபக்கத்தை சொல்லும் கதை "ப்ரைடே".

மைம் கோபிக்கு அடியாளாக இருப்பவர் நாயகன் அனிஷ் மாசிலாமணி. அனிஷ் மற்றும் கே.பி.ஒய் தீனா சேர்ந்து ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அப்போது, தீனா எதிர்பாராதவிதமாக எதிரி கும்பலிடம் மாட்டும்போது, அனிஷ் மாசிலாமணி அவரை காப்பாற்றி இருவரும் ஒரு இடத்தில் தஞ்சம் அடைகின்றனர்.

தன்னை கொலை செய்ய முயன்றவர்களை அடியாட்களுடன் தேடி வருகிறார்கள். ஒரு பக்கம் இப்படி இருக்க, மறுபக்கம் தீனாவும் அனிஷ் மாசிலாணியுடன் இருந்துக் கொண்டே அவரை கொலை செய்ய திட்டமிடுபவருக்கு உதவுகிறார்.

இறுதியில், அனிஷ் மாசிலாமணி யாரை, எதற்காக கொலை செய்ய முயன்றார்? தீனா ஏன் அதற்கு உதவுகிறார்? இதில் இருந்து அனிஷ் மாசிலாமணி தப்பித்தாரா? இல்லையா? என்பது படத்தின் மீதிக் கடை..

நடிகர்கள்

கே.பி.ஒய் தீனா எளிமையான கதாபாத்திரத்தில் நடித்து 2ம் பாதியில் கதையின் திருப்புமுனையாக இருக்கிறார். நடிகர் அனிஷ் மாசிலாமணி அளவான நடிப்பு மூலம் ரவுடி கதாபாத்திரத்தை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார். மைம் கோபி தனது அனுபவம் வாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இயக்கம்

படத்தை எழுதி இயக்கியிருக்கும் ஹரி வெங்கடேஷ், வன்முறை சூழ்ந்த ரவுடிகளின் மறுபக்கத்தை சொல்ல முயற்சித்திருக்கிறார் ஹரி வெங்கடேஷ். ஒரு சாதாரண கதையை சுவாரஸ்யமாக எடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அது இயக்குனருக்கு கைக்கொடுக்கவில்லை.

இசை

படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு பலம்.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவாளர் ஜானி கதைக்களத்தின் பயங்கரத்தை பல்வேறு கோணங்களில் காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு.

ரேட்டிங்- 1.5/5

Tags:    

Similar News