சினிமா செய்திகள்

'மெல்லிசை' திரைப்படத்தின் First Look..!- இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு

Published On 2025-10-23 19:03 IST   |   Update On 2025-10-23 19:03:00 IST
படம் அன்பு மட்டும் அண்டம் தேடும் ' என்ற டேக்லைனையும் கதையையும் கொண்டுள்ளது.

திரவ் இயக்கத்தில், அப்பா- மகள் இடையேயான அழகான உறவை திரையில் பிரதிபலிக்கும் கதையாக "மெல்லிசை" உருவாகியுள்ளது. இப்படத்தில், கிஷோர் குமார் மற்றும் புதுவரவு தனன்யா நடிக்கின்றனர். கிஷோருக்கு ஜோடியாக சுபத்ரா ராபர்ட் கதாநாயகியாக நடிக்கிறார். காதல், லட்சியம், தோல்வி, மீட்பு ஆகிய உணர்வுகளை 'மெல்லிசை' பேசுகிறது.

ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன், தனன்யா, புரோக்டிவ் பிரபாகர் மற்றும் கண்ணன் பாரதி நடித்துள்ளனர்.

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 'வெப்பம் குளிர் மழை' திரைப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களான ஹேஷ்டேக் FDFS புரொடக்ஷன்ஸ் தற்போது தயாரித்துள்ள 'மெல்லிசை' அனைத்து தலைமுறையினரையும் ஈர்க்கும் வகையில், ' அன்பு மட்டும் அண்டம் தேடும் ' என்ற டேக்லைனையும் கதையையும் கொண்டுள்ளது.

இந்நிலையில், 'மெல்லிசை' திரைப்படத்தின் முதல் பார்வையை பார்த்த வெற்றிமாறன் படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

போஸ்டரின் ஆழத்தையும் தெளிவையும் பாராட்டி வெற்றிமாறன் தெரிவித்ததாவது, "முதல்பார்வை போஸ்டரில் கிஷோர் இன்னும் இளைமையாக இருக்கிறார். 'அன்பு மட்டும் அண்டம் தேடும் ' என்ற டேக்லைன் படத்தின் கருவை சரியாக பிரதிபலிக்கிறது. 'மெல்லிசை' படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்றார்.

வெற்றிமாறனின் அன்பார்ந்த வாழ்த்துக்கு 'மெல்லிசை' படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News