சினிமா செய்திகள்

Father & Son Goal- அஜித்துடன் ரேஸ் செய்யும் மகன் ஆத்விக்: வைரல் வீடியோ

Published On 2025-04-04 09:09 IST   |   Update On 2025-04-04 09:09:00 IST
  • இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.
  • இந்நிலையில், தந்தை வழியில் கார் ரேஸில் நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் களமிறங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், நடிப்பை தொடர்ந்து கார் பந்தயத்திலம் அசத்தி வருகிறார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.

அதேவேளை கலைத்துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. கார் பந்தயங்களை முடித்துக்கொண்டு, அஜித் சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில், தந்தை வழியில் கார் ரேஸில் நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் களமிறங்கியுள்ளார்.

சென்னையில் உள்ள கோ கார்ட் சர்க்யூட்டில் அஜித்தின் மகன் கார் ரேஸில் பயிற்சி பெற்றார். குடும்பத்தினருடன் சென்று நடிகர் அஜித் மகனை உற்சாகப்படுத்தினார். மேலும் அப்பொழுது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. தற்பொழுது நடிகர் அஜித் மற்றும் மகன் ஆத்விக் இணைந்து காரை ஓட்டும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் அஜித் தன் மகன் ஆத்விகை தன் பின்னால் வரும்படி கை சைகை காட்டுகிறார். ஆனால் ஆத்விக் நடிகர் அஜித்தை முந்திக்கொண்டு செல்கிறார். இந்த வீடியோ பார்க்க மிகவும் க்யூட்டாக அமைந்துள்ளது.

அஜித் நடித்து முடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் முன்பதிவு இன்று இரவு 8.02 மணிக்கும் தொடங்கவுள்ளது. திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Tags:    

Similar News