சினிமா செய்திகள்

ஆஸ்கர் விருது இயக்குநர் பட வாய்ப்பை உதறித் தள்ளிய ஃபஹத் பாசில் - காரணம் என்ன?

Published On 2025-08-18 17:12 IST   |   Update On 2025-08-18 17:12:00 IST
  • ஃபஹத் பாசில் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து அல்தாஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஓடும் குதிரா சாடும் குதிரா.
  • இன்னாரிட்டு உடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை ஒருமுறை கிட்டத்தட்ட பெற்றிருந்தார்.

மலையாள சினிமாவின் பல்திறமைசாலி நடிகர் ஃபஹத் பாசில், உலக புகழ்பெற்ற, ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் அலெஹாண்ட்ரோ கொன்சாலஸ் இன்னாரிட்டு (Birdman, The Revenant) உடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை ஒருமுறை கிட்டத்தட்ட பெற்றிருந்தார். ஆனால் அந்த வாய்ப்பு இறுதியில் சாத்தியமாகாமல் போனது. இதுக்குறித்து அவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.

"அவருக்கு நான் பிடிக்கவில்லை; ஆடிஷனுக்குப் பிறகு என்னை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க" என்று நகைச்சுவையாக சொன்னார்.

ஆனால் பின்னர் அவர் உண்மையான காரணத்தை விளக்கினார்.

"அது அவர் என்னை ரிஜெக்ட் செய்தது இல்லை. என் ஆக்சென்ட் மேல் அவர் கவலைப்பட்டார். அதைப் பூர்த்தி செய்ய மூன்று நான்கு மாதங்கள் அங்கே இருக்க சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு சம்பளம் எதுவும் கிடைக்கவில்லை. அந்த அளவு நேரத்தையும், உழைப்பையும் ஆக்சென்ட் கற்றுக்கொள்வதற்காக செலவிடும் ஆர்வம் எனக்குள் இல்லை. அதனால்தான் அந்த வாய்ப்பை விட்டுவிட்டேன்." – ஃபஹத் பாசில்

ஃபஹத் பாசில் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து அல்தாஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஓடும் குதிரா சாடும் குதிரா. இப்படம் வரும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.

Tags:    

Similar News