சினிமா செய்திகள்

பெரியார் வழியில் "டியூட்" பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன்- வைரல் வீடியோ

Published On 2025-10-22 22:14 IST   |   Update On 2025-10-22 22:14:00 IST
டியூட் பட வெற்றியை தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி வெளியானது. 'டியூட்' படம் வெளியான நாள் முதல் வசூல் குவித்து வருகிறது. அந்த வகையில் படம் வெளியான ஐந்து நாட்களில் உலகளவில் ரூ.95 கோடி வசூலை குவித்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டியூட் படம் வெற்றி அடைந்ததற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய டியூட் பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கூறியதாவது:-

இன்றைய நாளில் டியூட் திரைப்படம் 95 கோடியை கடந்துள்ளது. நாளை 100 கோடியை அடைந்துவிடும். அப்படி என்றால், அத்தனை கால் தடங்கள் பதிந்துள்ளது. இது கதையை ஏற்றுக் கொண்டதற்கான அறிகுறி.

இதற்காக, ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

டியூட் பல விவாதத்தை ஏற்படுத்தியதாக சொல்றாங்க. இது தமிழ்நாடு, இந்த மாநிலத்தில் நிறைய பெரியவர்கள் இருந்தனர். ஒரு பெரியவரும் இருந்தார். அவர்கள் சொல்லாததை நாங்கள் சொல்லவில்லை. அவர்கள் வழியில்தான் நாங்களும் சொல்லி வருகிறோம். எனது அடுத்தடுத்த படங்களிலும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Full View
Tags:    

Similar News