இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மறைவு: திரைப்பிரபலங்கள் நேரில் அஞ்சலி
- மதயானை கூட்டம், ராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் இன்று காலமானார்.
- விக்ரம் சுகுமாரன் இறப்பிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மதயானை கூட்டம், ராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் இன்று காலமானார்.
இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு, இரவு பேருந்து ஏறும் போது நெஞ்சு வலி வர, அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை கொண்டு வரப்படவுள்ளது. இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இறப்பிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் வெற்றி மாறன், நடிகர்களான சாந்தனு, கலையரசன், காளி வெங்கட்
இயக்குநர் மாரி செல்வராஜ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் அப்பொழுது அவர் " பாலு மகேந்திரா சார் ஆபிஸ்-இல் நான் வேலைப்பார்த்து இருக்கும் போதே எனக்கு அவர் பழக்கம். அவருடைய மரணம் எனக்கு மிகுந்த வலியை கொடுக்கிறது. நிறைய நல்ல சினிமாவை எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டார்" என கூறினார்.
நடிகை விஜி சந்திரசேகர் " இயக்குநர் விக்ரம் சுகுமாரனுடைய இறப்பு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. எனக்கு மிகப்பெரிய பெயர் மற்றும் புகழ் வாங்கி கொடுத்த திரைப்படம் மதயானை கூட்டம். அடுத்தாண்டு ஒரு நல்ல திரைப்படத்தை இயக்க இருக்கிறேன் என இரண்டு வாரங்களுக்கு முன் போன் செய்தார். என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. அவர்கள்து குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.