சினிமா செய்திகள்
null

2026-ல் பா.ஜ.க. சார்பில் களம் காணும் விஷால்?

Published On 2024-04-14 08:25 GMT   |   Update On 2024-04-14 09:08 GMT
  • தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேச்சு, செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது.
  • 'உண்மையை சொல்ல வேண்டுமானால் கண்டிப்பாக 2026- ல் அரசியலுக்கு வருவேன்"..

நடிகர் விஷால் தற்போது 'ரத்னம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி உள்ளார்.அவரது இயக்கத்தில் 3- வது முறையாக விஷால் இதில் இணைந்து உள்ளார். இது விஷாலுக்கு 34- வது படமாகும்.

இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன், நடித்து உள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கவிஞர் விவேகா பாடல் வரிகள் எழுதி உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்து 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்தின் முதல் 'சிங்கிள்' கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.'டோன்ட் வோரி டா மச்சி' என்ற வரிகளுடன் இந்த பாடல் அமைந்தது. ரசிகர்களிடம் இந்த பாடல் வரவேற்பு பெற்றது.




இப்படம் வருகிற ஏப்ரல் 26- ந்தேதி ரத்னம் படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் "ரத்னம்" பட பிரமோஷன் பணிகளில் விஷால் ஈடுபட்டு உள்ளார். தற்போது ஒரு பேட்டியின் போது விஷால் கூறியதாவது :-

எனது சினிமா வாழ்க்கையில் 20 ஆண்டுகள் தற்போது நிறைவு செய்து உள்ளேன். திரும்பி பார்க்கும் போது எனக்கே இது பிரமிப்பாக உள்ளது.' ரத்னம்' படத்தில் இயக்குனர் ஹரி சொன்ன விஷயம் ஒன்னு தான். இந்த படத்தை நான் 'பிரேக் ' பண்ணி காட்டுகிறேன். வித்தியாசமான கதா பாத்திரம் மக்களிடம் வெற்றி பெறும் என சொன்னார்.

ஷூட்டிங் போது நான் சாப்பிடும் உணவு தான் எல்லோரும் சாப்பிடனும். நான் வெட்ஜ் என்ற பெயரில் கருவாடுகுழம்பு, முட்டை போட்டால் அவ்வளவு தான் சொன்னேன். அண்ணே எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் என அரசியலில் குதியுங்கள் என அனைவரும் சொல்லி விட்டனர்.




பிஜேபி சமீப காலமாக எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்து உள்ளது. தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேச்சு, செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது. அவரது பொறுமை எனக்கு பிடித்து உள்ளது.

பிஜேபி கட்சியில் சேர போகிறாயா என கேட்கின்றனர். உண்மையை சொல்ல வேண்டுமானால் கண்டிப்பாக 2026- ல் அரசியலுக்கு வருவேன்". என விஷால் கூறினார். இதன் மூலம் வருகின்ற 2026 சட்ட மன்ற தேர்தலில் விஷால் அரசியலில் ஈடுபடுவது உறுதியாகி உள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News