சினிமா செய்திகள்

பாலையாவின் தாண்டவம் : 18 மில்லியன் பார்வைகளை கடந்த அகண்டா 2 டீசர்

Published On 2025-06-10 14:09 IST   |   Update On 2025-06-10 14:09:00 IST
  • இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 25-ந் தேதி வெளியாக இருக்கிறது.
  • போயபதி சீனு இயக்கத்தில் 'அகண்டா' என்ற படத்தில் நடித்திருந்தார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் 'அகண்டா' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2021-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த ஒன்றாக அமைந்தது. இதில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் மாபெரும் வரவேற்பினைத் தொடர்ந்து 2-ம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகி முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் பணிபுரிகின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 25-ந் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு நேற்று வெளியிட்டது. சிவன் தாண்டவம் போன்று எதிரிகளை அழிப்பதுபோது அமைந்துள்ளது. டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலானது. டீசர் வெளியாகி இன்னும் 24 மணி நேரம் முடியவில்லை அதற்குள் 18 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது.

Tags:    

Similar News