சினிமா செய்திகள்

நாக சைதன்யா-சோபிதா துலிபாலா விவாகரத்தை கணித்த ஜோதிடர்-மகளிர் ஆணையம் விசாரணை

Published On 2024-10-30 10:52 IST   |   Update On 2024-10-30 10:52:00 IST
  • சோபிதாவின் உறவு பெரும் சவால்களை எதிர்கொள்ளும் என கணித்துள்ளார்.
  • ஜோதிடருக்கு எதிராக காட்டமான வார்த்தைகளால் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திருப்பதி:

நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இவர்களுடைய விவாகரத்துக்கு சந்திரசேகர ராவின் மகன் என்டி.ராமராவ் தான் காரணம் என பெண் மந்திரி ஒருவர் சர்ச்சை எழுப்பினார். இது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாக சைதன்யா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார்.

இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

சோபிதா துலிபாலா வீட்டில் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் தற்போது தொடங்கி விட்டன.

இந்த நிலையில் தெலுங்கானாவைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் வேணு சுவாமி என்பவர் 2027-ம் ஆண்டு இறுதிக்குள் நாக சைதன்யா, சோபிதா துலி பாலா விவாகரத்து செய்வார்கள். 2027-ம் ஆண்டு வேறொரு பெண்ணால் நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் உறவு பெரும் சவால்களை எதிர்கொள்ளும் என கணித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார். திருமணத்திற்கு முன்பே விவாகரத்து செய்வார்கள் என வீடியோ வெளியிட்டதை பார்த்த ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.

அவர்கள் ஜோதிடருக்கு எதிராக காட்டமான வார்த்தைகளால் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.


இந்த புகாரை ஏற்ற தெலுங்கானா ஐகோர்ட்டு இது குறித்து விசாரணை நடத்த மகளிர் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. ஒரு வாரத்திற்குள் விசாரணை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கை சவாலாக எடுத்துக்கொண்டு சந்திப்பேன் என ஜோதிடர் தெரிவித்துள்ளார். 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News