சினிமா செய்திகள்

அனுஷ்காவின் Ghaati படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

Published On 2025-08-30 11:34 IST   |   Update On 2025-08-30 11:34:00 IST
அனுஷ்கா காதி (Ghaati) என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற "Miss ஷெட்டி MR பொலிஷெட்டி" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

அதைத் தொடர்ந்து அனுஷ்கா காதி (Ghaati) என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.

இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.

Tags:    

Similar News