சினிமா செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொதுவெளியில் பேச, பாட தடை - நடிகை ஏஞ்சலினா ஜோலி கண்டனம்

Published On 2024-08-25 13:10 IST   |   Update On 2024-08-25 13:10:00 IST
  • ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொதுவெளியில் சத்தமாக பேசுவதற்கும் பாடுவதற்கும் தடை விதிப்பு.
  • பெண்கள் வெளியே வரும் போது முகம் உள்பட உடல் முழுவதும் மறைக்கக்கூடிய உடையை அணிய வேண்டும்.

2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபிறகு பெண்களுக்கான உரிமைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்றன.

பெண்கள் கல்வி கோர்க்கவும் வேலைக்குச் செல்லவும் தலிபான் அரசு அனுமதி மறுத்து வருகிறது. பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வரும் போது முகம் உள்பட உடல் முழுவதும் மறைக்கக்கூடிய உடையை அணிய வேண்டும் என்றும் ஆண்கள் துணையின்றி பெண்கள் வெளியில் செல்லக் கூடாது, விமானங்களில் பயணிக்கக் கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொதுவெளியில் சத்தமாக பேசுவதற்கும் பாடுவதற்கும் தடை விதித்து புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலிபான் அரசு எச்சரித்துள்ளது.

தாலிபான் அரசின் இந்த கொடூர சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார்.

Tags:    

Similar News