சினிமா செய்திகள்

பத்து பேரும் பெரிய பிராண்டுங்க... ஒரே வீடியோவில் திரும்பி பார்க்க வைத்த VELS

Published On 2025-06-27 11:21 IST   |   Update On 2025-06-27 11:21:00 IST
  • பல வெற்றி திரைப்படங்களை தயாரித்துள்ளது ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்நெர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்
  • இயக்குகிறார்கள் என்ற பட்டியலை தயாரிப்பு நிறுவனம் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி மற்றும் பல வெற்றி திரைப்படங்களை தயாரித்துள்ளது ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்நெர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம். இதுவரை தமிழ் சினிமாவில் 25 திரைப்படங்களை தயாரித்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு பிரபுதேவா நடித்த தேவி திரைப்படத்திஅ முதன் முதலில் தயாரித்தது.

சமீபத்தில் ஜீவா நடித்த அகத்தியா மற்றும் மிர்ச்சி சிவா நடித்த சுமோ திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்நிலையில் அடுத்து இரண்டு ஆண்டுகளில் 10 திரைப்படங்களை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. அப்படத்தை யார் யார் இயக்குகிறார்கள் என்ற பட்டியலை தயாரிப்பு நிறுவனம் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் அடுத்து திரைப்படம் இயக்கும் இயக்குநர்கள் பின்வருமாறு

டாடா படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு

கட்டா குஸ்தி படத்தை இயக்கிய செல்ல அய்யாவு

போர் தொழில் புகழ் விக்னேஷ் ராஜா

கனா புகழ் அருண்ராஜா காமராஜ்

2018 என்ற மலையாள படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப்,

96, மெய்யழகன் புகழ் பிரேம் குமார்

மாரிசெல்வராஜ், வெற்றிமாறன், கவுதம் வாசுதேவ் மேனன், சுந்தர் சி ஆகியோர் திரைப்படங்களை இயக்கவுள்ளனர்.

இன்னும் வரும் இரண்டு ஆண்டுகளில் மிகவும் தரமான திரைப்படங்கள் இந்த நிறுவனத்தின் கீழ் உருவாகி வெளியாக இருக்கிறது.

Full View

Tags:    

Similar News