சினிமா செய்திகள்

சென்னையில் ஸ்ட்ரீட் ரேசிங் நடத்தியதற்கு நன்றிக்கடன்..!- மனம் திறந்த அஜித்

Published On 2025-10-05 19:44 IST   |   Update On 2025-10-05 19:44:00 IST
  • மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டுக்கே மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது.
  • லோகோவை பயன்படுத்துவதற்கான அனுமதியை நான் அரசிடம் கேட்டுப் பெற்றேன்.

நடிகரும், ரேசருமான அஜித் குமார் சர்வதேச போட்டியின் போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) Logo-வை, கார்- ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்கிறோம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகரும், ரேசருமான அஜித் குமார் மனம் திறந்துள்ளார்.

அவர் கூறியதாவது:-

இந்தியாவின் முதல் ஸ்ட்ரீட் ரேசிங்கை தமிழ்நாடு அரசு சென்னையில் நடத்தியது மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டுக்கே மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது.

ஒரு மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகனாக அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) லோகோவை பயன்படுத்துவதற்கான அனுமதியை நான் அரசிடம் கேட்டுப் பெற்றேன்.

அவர்கள் எனக்கு ஸ்பான்சர் செய்யவில்லை, யாரிடமும் நான் ஸ்பான்சர்ஷிப் கேட்பதும் இல்லை. இந்த விளையாட்டு மட்டுமல்ல அனைத்து விளையாட்டுகளுக்கும் பல நல்ல விஷயங்களை SDAT செய்து வருகிறது.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News