சினிமா செய்திகள்

கார் விபத்தில் மீண்டும் சிக்கிய அஜித்

Published On 2025-04-19 11:58 IST   |   Update On 2025-04-19 11:58:00 IST
  • குட் பேட் அக்லி படத்தை முடித்து கொடுத்த கையோடு கார் ரேசிங்கில் அஜித் குமார் ஈடுபட்டு வருகிறார்.
  • பெல்ஜியம் ஸ்பா சர்கியூட்டில் இன்று நடைபெறும் ரேஸில் அஜித் குமார் பங்கேற்கிறார்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்

உலக அளவில் இந்தப் படம் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

குட் பேட் அக்லி படத்தை முடித்து கொடுத்த கையோடு கார் ரேசிங்கில் அஜித் குமார் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது பெல்ஜியம் ஸ்பா சர்கியூட்டில் இன்று நடைபெறும் ரேஸில் அஜித் குமார் பங்கேற்கிறார். தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெறும் இந்த ரேஸில் அஜித் உட்பட 3 ஓட்டுநர்கள் மாறி மாறி காரை இயக்கவுள்ளனர்

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பயிற்சியின் போது நடிகர் அஜித் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

எனினும் அஜித்திற்கு எந்த காயமும் ஏற்படவில்லை. காரின் முன் பகுதி மட்டுமே சேதமடைந்ததாக அவர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News