சினிமா செய்திகள்
null

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆகும் 5 மெகா ஹிட் திரைப்படங்கள்

Published On 2025-06-19 19:12 IST   |   Update On 2025-06-20 14:33:00 IST
  • நடிகர் விஜய் தனது 51-வது பிறந்தநாளை ஜூன் 22-ம் தேதி கொண்டாட உள்ளார்.
  • அவரது பிறந்தநாளை முன்னிட்டு விஜயின் சில பிரபலமான படங்களை மீண்டும் திரையிட திட்டமிட்டப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் சமீப காலமாக வெற்றி படங்களை ரிரீலிஸ் செய்வது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் நடிகர் விஜயின் படங்களும் ரிரீலிஸ் செய்யப்படுகிறது. அதில் சச்சின், தமிழன், கில்லி, போக்கிரி, தலைவா ஆகிய படங்கள் ரிரீலிஸ் செய்யப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விஜய் தனது 51-வது பிறந்தநாளை ஜூன் 22-ம் தேதி கொண்டாட உள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள் விஜயின் சில பிரபலமான படங்களை மீண்டும் திரையிட திட்டமிட்டுள்ளனர். அதன்படி அவரது பிறந்தநாளில் 5 படங்கள் ரீ ரிலீஸ் ஆகவுள்ளது.

எட்டு வருடங்களுக்கு முன்பு வெளியான மெர்சல் படம் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வர இருக்கிறது. இந்த படம் ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது.

அதனை தொடர்ந்து 21-ந் தேதி கத்தி, லியோ, மாஸ்டர் ஆகிய படங்களும் 22-ந் தேதி பகவதி படமும் ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 20-ம் தேதி அவரது 4 பிளாக்பஸ்டர் படங்கள் மெர்சல், கத்தி, திருமலை மற்றும் லியோ கேரளாவில் ரீ ரிலீஸாக உள்ளன. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News