சினிமா செய்திகள்
சூழல் வெப் தொடர்

சூழல் வெப் தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published On 2022-06-04 18:12 IST   |   Update On 2022-06-04 18:12:00 IST
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள வெப்தொடரின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழில்  ‘ஓரம் போ’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி. தொடர்ந்து, ‘வா குவாட்டர் கட்டிங்', ‘விக்ரம் வேதா’ போன்ற படங்களை இயக்கியுள்ளனர். ‘விக்ரம் வேதா’ ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இவர்கள் திரைக்கதை எழுதியுள்ள வெப் தொடர் ‘சூழல்’.  

இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த வெப்தொடரில் பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த தொடரை பிரம்மா மற்றும் அனுசரண் இயக்கியுள்ளனர்.



 தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த வெப்தொடர் ஜூன் 17-ஆம் தேதி முதல் அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News