சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published On 2022-05-30 18:05 IST   |   Update On 2022-05-30 18:05:00 IST
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13ம் தேதி வெளியான திரைப்படம் 'டான்'. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மேலும் டான் படத்தில் சூரி, சமுத்திரக்கனி, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற டான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இப்படம் வெளியான 12 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.


டான்

இந்நிலையில் டான் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி டான் திரைப்படம் வரும் ஜூன் 10 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News