சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயன்

டான் படத்தின் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்

Update: 2022-05-05 11:32 GMT
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்தின் புதிய அப்டேட்டை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். 'டான்' திரைப்படம் வரும் மே மாதம் 13ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

சிவகார்த்திகேயன்

இந்நிலையில் டான் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, டான் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News