சினிமா
மகன் ஆத்விக் உடன் அஜித்

‘தல’கவசத்துடன் ஆத்விக் அஜித் - வைரலாகும் புகைப்படம்

Published On 2021-10-31 15:22 IST   |   Update On 2021-10-31 15:22:00 IST
நடிகர் அஜித், தனது மகன் ஆத்விக் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை விடுமுறையில் இப்படம் வெளியாக உள்ளது. 

வலிமை படத்தில் நடித்து முடித்த கையோடு பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் நடிகர் அஜித். வட மாநிலங்களில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.


மகன் ஆத்விக் உடன் அஜித்

இந்நிலையில், தற்போது நடிகர் அஜித், தனது மகன் ஆத்விக் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் ஆத்விக் ஹெல்மெட் அணிந்தபடி அஜித் அருகில் நிற்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Similar News