சினிமா
பிரபு தேவா

அவன் ஒரு காட்டாறு - பிரபு தேவா

Published On 2021-10-08 13:13 IST   |   Update On 2021-10-08 13:13:00 IST
தமிழ், இந்தி மொழிகளில் நடிகராகவும், இயக்குனராகவும், நடன இயக்குனராகவும் வலம் வரும் பிரபு தேவா தற்போது பஹிரா என்னும் படத்தில் நடித்து இருக்கிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பஹிரா. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

இதில் பிரபுதேவா பேசும் போது, பஹிரா படத்தின் தயாரிப்பாளர் பரதன் அவர்களுக்கு நன்றி. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறந்த நடிகர். ஆதிக் ஒரு காட்டாறு. ஆறு வளைந்து வளைந்து சென்று ஒரு கடலில் கலக்கும். அதுபோல் தான் ஆதிக் ரவிச்சந்திரன். படத்தில் பல வேலைகளை செய்து ஒரு நல்ல படத்தை இயக்கி இருக்கிறார். முதல் படத்திலேயே சிறப்பாக இசையமைத்து இருக்கிறார் கணேஷ்.



நாயகி ஜனனி அழகாக இருக்கிறார், அழகாகவும் நடிக்கிறார். அப்புறம் காயத்ரியும், சாக்ஷி, அமைரா, சஞ்சிதா, சோனியா அகர்வால் அனைவரும் அழகாக நடித்திருக்கிறார்கள். காஸ்டியூம் டிசைனர் சத்யா, ஒவ்வோரு சீனுக்கும் புது புது டிரஸ் கொடுத்து அசத்தினார். படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள். பஹிரா திரைப்படம் அனைவரும் பிடிக்கும் என்றார்.

Similar News