சினிமா
பவர் ஸ்டார் சீனிவாசன்

படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்த பவர் ஸ்டார் - மருத்துவமனையில் அனுமதி

Published On 2021-09-29 14:43 IST   |   Update On 2021-09-29 14:43:00 IST
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இயக்கி நடிக்கும் ‘பிக்கப் டிராப்’ படத்தில், அவருக்கு ஜோடியாக வனிதா நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் ‘லத்திகா’ என்ற படத்தை இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் பவர் ஸ்டார் சீனிவாசனை பிரபலமாக்கியது. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த அவர், தற்போது ‘பிக்கப் டிராப்’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் அவர் வனிதாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.


பவர் ஸ்டார் சீனிவாசன்

இந்நிலையில் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்த அவரை படக்குழுவினர் உடனடியாக மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.

Similar News