சினிமா
சீனு ராமசாமி, ஜிவி பிரகாஷ்

சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்

Published On 2021-07-19 12:29 IST   |   Update On 2021-07-19 12:32:00 IST
வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பெயர் பெற்ற சீனு ராமசாமி, அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பரத் நடித்த கூடல்நகர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. இதையடுத்து இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் தேசிய விருது பெற்றது. பின்னர் நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் இயக்கத்தில் உருவாகி உள்ள இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.



இந்நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தற்போது ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு, தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தை இயக்க உள்ளார் சீனு ராமசாமி.

Similar News