சினிமா
கார்த்தி, விஜய்

விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு தளத்துக்கு திடீர் விசிட் அடித்த கார்த்தி

Update: 2021-07-19 02:20 GMT
படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தபோது கார்த்தியிடம் பேசிய விஜய் “உங்கள் படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். நன்றாக நடிக்கிறீர்கள்” என்று பாராட்டி உள்ளார்.
விஜய் நடிக்கும் பீஸ்ட், கார்த்தியின் சர்தார் ஆகிய 2 படங்களின் படப்பிடிப்புகளும் சென்னை பூந்தமல்லி அருகே ஒரே ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. சர்தார் படத்தில் கார்த்தி வயதான தந்தை மற்றும் மகனாக இரு வேடங்களில் நடிக்கிறார். அவர் வயதானவராக நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.

சர்தார் படத்துக்காக போடப்பட்ட முதியவர் கெட்-அப் உடன் நடிகர் கார்த்தி திடீரென்று விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு அரங்குக்கு  சென்றுள்ளார். முதியவர் கெட்-அப்பில் இருந்ததால், அங்கு கார்த்தியை யாருக்கும் அடையாளம் தெரியவில்லையாம். 

இதனால் சில நிமிடங்கள் ஓரமாக நின்று படப்பிடிப்பை பார்த்துக்கொண்டு இருந்த அவர், பின்னர் நடிகர் விஜய் அருகில் சென்று நான்தான் கார்த்தி என்று தன்னை அறிமுகம் செய்துள்ளார். கார்த்தியின் தோற்றத்தை பார்த்த வியந்து போன நடிகர் விஜய் உங்களை அடையாளமே தெரியவில்லை என்று சொன்னாராம். பின்னர் இருவரும் நலம் விசாரித்தனர்.


விஜய், கார்த்தி

அப்போது கார்த்தியிடம் பேசிய விஜய் “உங்கள் படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். நன்றாக நடிக்கிறீர்கள்” என்று பாராட்டி உள்ளார். படப்பிடிப்பு தளத்தில் விஜய்யுடன் சுமார் ஒரு மணிநேரம் பேசிக்கொண்டு இருந்த கார்த்தி, பின்னர் தனது சர்தார் படப்பிடிப்பு தளத்துக்கு புறப்பட்டுச் சென்றாராம்.
Tags:    

Similar News