சினிமா
நரகாசூரன் படத்தின் போஸ்டர்

நரகாசூரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்

Published On 2021-07-18 11:50 IST   |   Update On 2021-07-18 11:50:00 IST
கார்த்திக் நரேன் இயக்கியுள்ள நரகாசூரன் திரைப்படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
‛துருவங்கள் 16' படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் 'நரகாசூரன்'. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை கெளதம் மேனன், கார்த்திக் நரேன், பத்ரி கஸ்தூரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். 

பைனான்ஸ் சிக்கலால், நீண்ட நாட்களாக இந்தப் படம் வெளியாகாமல் உள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து கெளதம் மேனன் விலகிவிட்டார். பல முறை இந்தப் படத்தின் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டு, ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியாக ஓடிடி வெளியீட்டுக்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. 


நரகாசூரன் படக்குழு

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி வெளியீடு உறுதியாக உள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஆகஸ்ட் 13ந் தேதி நேரடியாக சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News