சினிமா
பிரபல கலை இயக்குனர் அங்கமுத்து சண்முகம் புற்றுநோய் பாதிப்பால் மரணம்
கலை இயக்குனர் அங்கமுத்து சண்முகம் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர்கள் கே.ஆர்., ஆர்.கே.செல்வமணி, மனோஜ்குமார் உட்பட பல இயக்குனர்களின் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் அங்கமுத்து சண்முகம். தமிழ், தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குனராக பணிபுரிந்தவர் இவர், முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும் பணியாற்றி உள்ளார்.
கலை இயக்குனர்கள் சங்கத்தில் தலைவராகவும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளராகவும் தொடர்ந்து மூன்று முறை தேர்வாகி பணிபுரிந்து வந்தார். புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அங்கமுத்து சண்முகம் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.