சினிமா
மாம்பழ விற்பனையில் இறங்கிய பிரபல நடிகர்
பிரபல நடிகர் ஒருவர் தன்னுடைய தோட்டத்தில் விவசாயம் செய்து அதில் கிடைத்த மாம்பழங்களை விற்பனை செய்து இருக்கிறார்.
தெலுங்குத் திரையுலகின் பிரபல நடிகர் கிருஷ்ணாவின் மூத்த மகன் நரேஷ். தெலுங்கில் 200க்கும் மேற்பட்ட படங்களிலும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் பல நடிகர்கள் வைத்துள்ளதைப் போன்று இவரும் விவசாயப் பண்ணை வைத்துள்ளார். கடந்த வருட லாக்டவுனின் போதே விவசாயம் செய்வதில் இறங்கினார். இந்த லாக்டவுனில் மாம்பழம், நாவல்பழம் விற்பதிலும் இறங்கியுள்ளார்.
நடிகர் நரேஷ்
இது குறித்து தனது சமூக வலைத்தள பதிவில், “நரேஷ் என்கிற விவசாயி அவரது கையால் பறிக்கப்பட்ட மாம்பழம், நாவல் பழங்கள் ஆகியவற்றை, கிலோ 50 ரூபாய்க்கு விற்றார். அதன் மூலம் 3600 ரூபாய் சம்பாதித்தார். ஒரு நடிகராக அதிகபட்ச சம்பளம் வாங்கியதை விட இது மகிழ்ச்சியானது. விவசாயம் செய்து உண்மையான மகிழ்ச்சியை உணருங்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.