சினிமா
நிவேதா பெத்துராஜ்

டெலிவரி செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி - உணவகம் மீது நடிகை நிவேதா பெத்துராஜ் புகார்

Published On 2021-06-24 08:40 IST   |   Update On 2021-06-24 08:44:00 IST
சம்பந்தப்பட்ட உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை நிவேதா பெத்துராஜ் வலியுறுத்தி உள்ளார்.
ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இதையடுத்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இவர் கைவசம் பார்ட்டி, பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிவேதா பெத்துராஜ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


நடிகை நிவேதா பெத்துராஜ் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படம்

அதில், ஸ்விகி செயலி மூலம் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாடு ஆர்டர் செய்ததாகவும், அங்கிருந்து டெலிவரி செய்யப்பட்ட உணவில், கரப்பான்பூச்சி இருந்ததாகவும் புகார் தெரிவித்துள்ள நிவேதா பெத்துராஜ், இதற்கு ஆதாரமாக புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

மேலும், கரப்பான் பூச்சியுடன் உணவு டெலிவரி செய்யப்படுவது இது முதல்முறையல்ல என்றும் குறிப்பிட்ட உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகை நிவேதா பெத்துராஜ் வலியுறுத்தி உள்ளார்.

Similar News