சினிமா
தனுஷ்

டோலிவுட்டில் அறிமுகமாகும் தனுஷ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published On 2021-06-18 09:11 IST   |   Update On 2021-06-18 09:16:00 IST
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகில் நடித்துள்ள தனுஷ், அடுத்ததாக டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், தற்போது ‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் ‘டி 43’ படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ள தனுஷ், பின்னர் கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் கூட்டணி அமைக்க உள்ளார். இதுதவிர ராட்சசன் பட இயக்குனர் ராம் குமாருடன் ஒரு படம், செல்வராகவன் இயக்கத்தில் 2 படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.


தனுஷ், சேகர் கமுலா

இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ், பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதன்மூலம் நடிகர் தனுஷ், தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. 


Similar News