சினிமா
பஞ்சதந்திரம் படக்குழு

பஞ்சதந்திரம் 2-ம் பாகம் உருவாகுமா? - பிரபல நடிகர் விளக்கம்

Published On 2021-06-08 07:40 IST   |   Update On 2021-06-08 14:46:00 IST
கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பஞ்சதந்திரம் படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா என்பது குறித்து பிரபல நடிகர் விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினிகாந்தின் எந்திரன், கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்தின் பில்லா, விஷாலின் சண்டக்கோழி, விக்ரமின் சாமி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி, லாரன்சின் காஞ்சனா மற்றும் அரண்மனை உள்ளிட்ட படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளன. தற்போது கமலின் இந்தியன் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. 

இதனிடையே கமல்ஹாசன் நடித்து 2002-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் வரவேண்டும் என்றும் ரசிகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இந்த படத்தில் கமலுடன் ஜெயராம், ஸ்ரீமன், யூகி சேது, சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். முழுக்க முழுக்க நகைச்சுவை காட்சிகள் நிறைந்த இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருந்தார். 


ஸ்ரீமன் 

இந்நிலையில், இப்படத்தில் நடித்திருந்த நடிகர் ஸ்ரீமன் பஞ்சதந்திரம் 2-ம் பாகம் வருமா என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: “என்னிடம் நிறைய பேர் பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். எனக்கு தெரிந்த வகையில் இதற்கான பதில் என்னவென்றால், கமல்ஹாசன் முடிவு செய்தால் அது நடக்கும். இது நடக்குமா? இல்லையா என்று உங்களைப்போல் படக்குழுவினரும் காத்து இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Similar News