சினிமா
லோகேஷ் கனகராஜ் - காஜல் அகர்வால்

லோகேஷ் கனகராஜ் படத்தில் காஜல் அகர்வால்

Update: 2021-06-07 13:18 GMT
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால், திருமணத்திற்கு பின்பும் படங்களில் நடித்து வருகிறார்.
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய வெற்றி படங்களில் ஒன்று ’கைதி’. இந்த படத்தில் பாடல்கள் மற்றும் நாயகி இல்லை.

இந்த நிலையில் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது. கார்த்தி நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.இந்த நிலையில் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ள ‘கைதி’ திரைப்படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் பிளாஷ்பேக்கில் அஜய்தேவ்கான் மனைவி கேரக்டர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News