சினிமா
ஏ.ஆர்.முருகதாஸ், நாகேஷ்

நாகேஷுடன் நடித்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்... வைரலாகும் வீடியோ

Published On 2021-06-04 23:00 IST   |   Update On 2021-06-04 23:00:00 IST
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நாகேஷ் உடன் நடித்த காட்சியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தான் இயக்கும் திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் தோன்றுவார். 

ஆனால் அவர் இயக்குனராகும் முன்னதாகவே ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்து உள்ளதாக கூறி அந்த மலரும் நினைவுகளின் வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஏஆர் முருகதாஸ் பகிர்ந்துள்ளார்.

கடந்த 1997 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’பூச்சூடவா’ திரைப்படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்பாஸ் மற்றும் சிம்ரன் முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த திரைப்படத்தை உதயசங்கர் என்பவர் இயக்கியிருந்தார். 

நாகேஷ் மற்றும் சிம்ரன் நடித்துள்ள அந்த காட்சியில் சர்வராக தோன்றும் ஏ.ஆர்.முருகதாஸ், நாகேஷ் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் காட்சியின் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.


Similar News