சினிமா
ஜூஹி சாவ்லா

நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கியதாக பிரபல நடிகைக்கு ரூ.20 லட்சம் அபராதம்

Published On 2021-06-04 18:57 IST   |   Update On 2021-06-05 11:36:00 IST
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கு எதிராக, நடிகையும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தியாவில் 4ஜி தொழில்நுட்பம் தற்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக 5ஜி அறிமுகமாக உள்ளது. ஏற்கனவே 5ஜி வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் விற்பனை இந்திய சந்தையில் மிகுந்த வரவேற்புடன் தொடங்கிவிட்டது.

அதேநேரம், 5ஜி தொழில்நுட்பத்தால் உருவாகும் கதிர்வீச்சால் பூமியிலுள்ள பல்வேறு உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஒரு சாரார் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


நடிகை ஜூஹி சாவ்லா

பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா நாட்டில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜேஆர்.மிதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்ட நீதிபதி வெற்று விளம்பரத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது என்று கண்டனம் தெரிவித்தார். மேலும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கியதாக 20 லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Similar News