சினிமா
விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட நடிகைகளை போலீசார் மீட்டு அழைத்து வந்த போது எடுத்த புகைப்படம்

மும்பையில் தமிழ் பட நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது - வெளியான அதிர்ச்சி தகவல்

Published On 2021-06-04 14:11 IST   |   Update On 2021-06-04 14:11:00 IST
தமிழ் பட நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 14 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
தானே மாவட்டம் நவ்பாடா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் போலி வாடிக்கையாளரை அனுப்பி சோதனை நடத்தினா். அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் அங்கு இருந்து 2 பெண்கள் மீட்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள் தமிழ், தென்னிந்திய படங்களில் நடித்த நடிகைகள் என்பது தெரிவந்தது. முதலில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் மராட்டிய விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதால் அவர்கள் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். 2 நடிகைகளும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.


நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்களை போலீசார் கைது செய்து அழைத்து வந்தபோது எடுத்த புகைப்படம்

இந்த நடிகைகள் கொரோனாவால் தற்போது பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்து உள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்தி விபசார கும்பல் இவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

அதே நேரத்தில் நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக ஹசினா மேமன், ஸ்வீட்டி என 2 பெண்கள் மற்றும் விபசார தரகரான விஷால் என்ற சுனில்குமார் உத்தம்சந்த் ஜெயின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Similar News