சினிமா
நடிகை பிரேமா

44 வயதில் 2-வது திருமணத்திற்கு தயாராகும் விக்ரம் பட நடிகை?

Published On 2021-06-04 07:39 IST   |   Update On 2021-06-04 17:03:00 IST
44 வயதாகும் விக்ரம் பட நடிகை ஒருவர், 2-வது திருமணம் செய்து கொள்ள தயாராகி உள்ளதாகவும், மாப்பிள்ளையை தேர்வு செய்து விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
தமிழில் சத்யராஜ் ஜோடியாக அழகேசன், விக்ரமுடன் கண்களின் வார்த்தைகள் மற்றும் தாயே புவனேஸ்வரி, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பிரேமா. பெங்களூருவை சேர்ந்த இவர், கன்னடத்தில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.

தெலுங்கிலும் 28-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்த பிரின்ஸ் படம் பெரிய வெற்றி பெற்றது. சிறந்த நடிகைக்கான கர்நாடக அரசு விருதும் பெற்றுள்ளார். 

நடிகை பிரேமா, கடந்த 2006-ம் ஆண்டு ஜீவன் அப்பாச்சு என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களுக்கு பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்து செய்து பிரிந்தனர்.


நடிகை பிரேமா

நடிகை பிரேமாவுக்கு தற்போது 44 வயது ஆகிறது. இந்த நிலையில், அவர் 2-வது திருமணம் செய்து கொள்ள தயாராகி உள்ளதாகவும், மாப்பிள்ளையை தேர்வு செய்து விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனை பார்த்த ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ஆனால் நடிகை பிரேமா இதனை உறுதிப்படுத்தவில்லை.

Similar News