சினிமா
தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் சமந்தா

எதிர்ப்புகளுக்கு மத்தியில் தி பேமிலி மேன் 2 ரிலீஸ்... மக்கள் அதிர்ச்சி

Published On 2021-06-03 17:11 GMT   |   Update On 2021-06-03 17:11 GMT
முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் தி பேமிலி மேன் 2 வெப் தொடர் திடீரென்று ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி இருக்கும் வெப் தொடர் ‘தி பேமிலி மேன் 2’. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்தது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், தமிழக அரசும் இந்த தொடருக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினர். இந்த சர்ச்சைகள் குறித்து நடிகை சமந்தா, எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். 


தி பேமிலி மேன் 2 போஸ்டர்

இந்நிலையில் இந்த வெப் தொடர் திடீரென்று ஓடிடி தளத்தில் ரிலீசாகி உள்ளது. இந்த வெப் தொடரை தடை செய்ய வேண்டும் என்று பலரும் குரல் எழுப்பி வரும் நிலையில் திடீரென்று ரிலீசாகி இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Tags:    

Similar News