சினிமா
இளையராஜா

பாட்டு பாடி இளையராஜாவிற்கு வாழ்த்து சொன்ன பிரபல பாடகி

Published On 2021-06-02 17:57 IST   |   Update On 2021-06-02 20:57:00 IST
இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசைஞானியால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடகிகளில் ஒருவர் சித்ரா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இளையராஜாவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:

நீங்கள் எனக்கு ஒரு குருவாக, அப்பாவாக இருந்து அறிவுரை கூறி என்னை வழிநடத்தினீர்கள். உங்களைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிறது. இந்த கோவிட் பிரச்சனை காரணமாக ஒருத்தரை ஒருத்தர் பார்க்க முடியவில்லை. இந்த தருணத்தில் கடவுள் உங்களுக்கு நல்ல தீர்க்காயுசு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.


சித்ரா - இளையராஜா

இன்னும் 100 வருஷம் உங்களுடைய இசை பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் இசையில் நான் பாடிய ஒரு பாடலை பாடுகிறேன் என்று கூறிய சித்ரா, ‘வந்ததே குங்குமம்’ என்ற பாடலையும் பாடி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.


Similar News