சினிமா
கணவர் குழந்தையுடன் ஸ்ரேயா கோஷல்

குழந்தைக்கு பெயர் வைத்து உலகிற்கு அறிமுகம் செய்த பாடகி ஸ்ரேயா கோஷல்

Published On 2021-06-02 16:00 IST   |   Update On 2021-06-02 16:00:00 IST
இந்திய மொழி அனைத்திலும் பாடி மிகவும் பிரபலமாக இருக்கும் ஸ்ரேயா கோஷல், தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், இந்திய மொழி அனைத்திலும் பாடி வருகிறார். அவருடைய மயக்கும் குரலுக்கு அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்டநாள் காதலரான ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் செம பிசியாகப் பாடிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா கோஷல்.

ஸ்ரேயா கோஷலுக்கு கடந்த மே மாதம் 22 ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தைக்கு தேவ்யான் முகோபாத்யாயா என்று பெயர் வைத்து உலகிற்கு அறிமுகம் செய்து இருக்கிறார். 

மேலும் மகன் பிறந்த அந்த முதல் பார்வையில் ஒரு விதமான அன்பினால் எங்கள் இதயங்களை நிரப்பிவிட்டார். தாய் மற்றும் தந்தையால் மட்டுமே இதை உணர முடியும். இது இன்னும் ஒரு கனவு போலவே இருக்கிறது. கணவர் மற்றும் வாழ்க்கையின் இந்த அழகான பரிசுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன் என்று ஸ்ரேயா கோஷல் பதிவு செய்து இருக்கிறார்.

Similar News