சினிமா
நடிகையை அடித்து சித்ரவதை செய்த நடிகர் கைது
நடிகை கொடுத்த புகாரை அடுத்து பிரபல நடிகர் கைது செய்யப்பட்டு இருப்பது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியில் ரபூ சக்கார், ஹாஸ்டி ஹாஸ்டி, ஜாக் இன் ஜோஹி, டாம் டிக் ஹாரி ராக் அகைன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிஷா ராவல். இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இவருக்கும், டி.வி. நடிகர் கரண் மேஹ்ராவுக்கும் 2017-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நிஷா ராவலுக்கும், கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். விவாகரத்து செய்து கொள்ளவும் முடிவு செய்து இருந்தனர்.
இந்நிலையில், கணவர் தன்னை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்ததாகவும், சுவரில் தள்ளியதாகவும், இதில் தனது தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது என்றும் மனுவில் கூறியுள்ளார்.
நிஷா ராவல், கரண் மேஹ்ரா
இதையடுத்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி கரண் மேஹ்ராவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்தார். இந்த விவகாரம் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.